சகுனம் பார்த்தல்

 நல்ல காரியம் இதை செய்ய கிளம்பினாலும் சகுனம் பார்ப்பது முக்கியமாகும். நாம் செய்யப் புறப்படும் காரியம் வெற்றியை கொடுக்கும் அல்லது தோல்வியை தரும் என்பதை சகுனம் மூலமாக தெரிந்து கொண்டுவிடலாம்.

புதுமனையில் கட்டிடவேலை ஆரம்பிப்பதற்காக சொல்லும்போது மனை முகூர்த்தம் செய்வதற்காக செல்லும் போது கிரகப்பிரவேசம் செய்ய புறப்படும்போது காணப்படும் தங்களை கவனிக்க வேண்டும். எல்லாவகையான சட்டங்களுக்கும் பலனுண்டு.

மனை நோக்கி புறப்படும் போது இளம் வயது அழகு லட்சுமிகரமான முகம் மெலிவான மேனியும் கருத்த கூந்தலும் கொண்ட சுமங்கலிப் பெண் எதிரே வந்தால் அது நல்ல சகுனமாகும். மனையில் கட்டப்படும் வீட்டில் வாழ்பவர்கள் எல்லாவகையான நன்மைகளையும் பெறுவார்கள்.

 இரண்டு பசுக்கள் குறுக்கே வந்தால் அது நல்ல சகுனம் ஆகும்.அதே போல் எதிரே சவ ஊர்வலம் வந்தாலும் தலைக்கு மேல் கருடன் வலப் பக்கத்தில் இருந்து இடப்பக்கமாக வட்டமிட்டாலும் அவையும் நல்ல சகுனங்களே.

குழந்தைகள் பிறந்த மேனி கோலத்தில் மெதுவாக எதிரே நடந்து வந்தால் அது மிகவும் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. பக்திமான்கள் இருவராக எதிரே வந்தால் நல்ல சகுனம் ஆகும். 

எதிரே விதவை பெண் வந்தால் அது தீய சகுனம் ஆகும். எதிரே எருமை மாடுகள் வந்தால் வியாதியஸ்தர்கள் வந்தால் அவை தீய சகுனம் ஆகும்.

வீடு கட்டும் மனை அடையும்போது பல்லி வலப்புறத்தில் இருந்து சொன்னால் அங்கு வீடு கட்டி வாழ்பவர்களின் வாழ்க்கையில் அமைதியும் நிம்மதியும் நிறைந்து வகையாக இருக்கும். சகுணங்கள்.

பல்லியானது இடப்பக்கத்தில் இருந்து சொன்னால் அங்கு கட்டப்படும் வீட்டில் வாழ்பவர்கள் மிகுந்த செல்வத்துடன் பிறரை அதிகாரம் செய்யும் அந்தஸ்துடன் தொழில் வாழ்வார்கள்.

மனையை அடையும் போது அங்கு வெள்ளைப்பசு  அல்லது வெண்ணிற காலை நின்று கொண்டிருப்பதை காண நேர்ந்தால் அங்கு வீடு கட்டிய வாழ்பவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்திருக்கும் வேகமாக முன்னேற்றமும் உண்டாகும்.

மனையில் வெள்ளைப் புறாவை காண நேரிட்டால் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.வெண்ணிற கோழியை பார்க்க நேர்ந்தால் உறவினர்களும் உதவியும் ஆதரவும் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.

வீடு கட்டப்படும் மனை அடையும் போது எதிரே ஒணான் வந்தால் அது தீய சகுனம் ஆகும். அதேபோல் பூமியை வண்டுகள் துடைப்பதை பார்ப்பது கெட்ட சகுனமாக கருத வேண்டும். அங்கு வீட்டு கீர்த்தி வாழ்பவர்கள் வறுமையாலும் நோயாலும் பாதிக்கப்படுவார்கள்.

மனையில் கருப்பு நிற பசு அல்லது காளையை பார்ப்பது கெட்ட சகுனமாகும்.அதே போல் அந்த கருப்பு நிற புழுவைக் காண்பதும் கெட்ட சகுன அறிகுறிகள் தென்பட்டால் கட்டட வேலையை உடனே ஆரம்பிக்க கூடாது அதை மூன்று அல்லது நான்கு நாட்கள் தள்ளிப் போடவேண்டும்.

மனையின் நுழையும்போதும் எறும்புகள் வரிசை இல்லாமல் செல்வதே பார்க்க நேரிட்டால் அது தீய சகுனமாகும்.அன்றைய தினமே கட்டிட வேலை ஆரம்பிக்க கூடாது.

கட்டடம் மனையில் நுழையும் போது காக்கைகள் கத்திக்கொண்டே வலப் புறத்தில் இருந்து இடப்பக்கமாக பறந்து சென்றால் அது நல்ல சகுனமாகும் வீடு கட்டும் பலருக்கு ஏதேனும் துன்ப்கள் இருந்தால் அவை நீங்கி நல்ல பலன்கள் நடைபெற தொடங்கும்.

அதேபோல் கட்டட மனைக்குள் நுழையும் போது கோழி கிளி பசு கொக்கு அணில் கழுதை நரி முயல் போன்றவை வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக ஓடுவது நல்ல சகுணங்கள்.

மனைக்கு சென்று கொண்டிருக்கும்போது அல்லது மனைக்குள் நுழையும் போது குடிகாரன்,பிச்சைக்காரன்,கூனன்,முடவன்,குருடன்,நோண்டி சிதைந்த மூக்கை கொண்டவன் சுடுகாடு காக்கும் வெட்டியான் போன்றவர்களை காண்பது தீய சகுனம் ஆகும்.

அதேபோல் அழுக்கான ஆடை அணிந்து இருப்பவன்,செம்பட்டை முடி கொண்டவன்,ஒற்றைக்கண் கெட்டவன்,கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டிருக்கும் பெண்,கையில் தடி வைத்திருப்பவன்,சன்னியாசி போன்றவர்களே பார்ப்பதும்  தீய சகுனம் கருதப்பட வேண்டும்.

வீடு கட்டப்படும் மனைக்கு சென்று கொண்டிருக்கும் போது அல்லது மனைக்குள் நுழையும்போது நிறைகுடம் தாங்கிய சுமங்கலி யானை,தனிமனிதன்,சலவைத் தொழிலாளி,குதிரை சிவந்த நிற ஆடை அணிந்த கிழவி,பால்,நெய்,நீரி,றைச்சி தயிர் குடம் போன்றவை எதிர்ப்பட்டால் அது மிகவும் நல்ல தினமாகும் அங்கு வீடு கட்டி வருபவர்கள் செல்வம் செல்வாக்கு நிறைந்த வாழ்க்கை அமையும்.

Comments

Popular posts from this blog

மண்ணில் இருக்கும் சகுனம் பார்த்தலும்

மண்ணின் இயல்பு

மனையடி சாஸ்திரம்