சகுனம் பார்த்தல்
நல்ல காரியம் இதை செய்ய கிளம்பினாலும் சகுனம் பார்ப்பது முக்கியமாகும். நாம் செய்யப் புறப்படும் காரியம் வெற்றியை கொடுக்கும் அல்லது தோல்வியை தரும் என்பதை சகுனம் மூலமாக தெரிந்து கொண்டுவிடலாம். புதுமனையில் கட்டிடவேலை ஆரம்பிப்பதற்காக சொல்லும்போது மனை முகூர்த்தம் செய்வதற்காக செல்லும் போது கிரகப்பிரவேசம் செய்ய புறப்படும்போது காணப்படும் தங்களை கவனிக்க வேண்டும். எல்லாவகையான சட்டங்களுக்கும் பலனுண்டு. மனை நோக்கி புறப்படும் போது இளம் வயது அழகு லட்சுமிகரமான முகம் மெலிவான மேனியும் கருத்த கூந்தலும் கொண்ட சுமங்கலிப் பெண் எதிரே வந்தால் அது நல்ல சகுனமாகும். மனையில் கட்டப்படும் வீட்டில் வாழ்பவர்கள் எல்லாவகையான நன்மைகளையும் பெறுவார்கள். இரண்டு பசுக்கள் குறுக்கே வந்தால் அது நல்ல சகுனம் ஆகும்.அதே போல் எதிரே சவ ஊர்வலம் வந்தாலும் தலைக்கு மேல் கருடன் வலப் பக்கத்தில் இருந்து இடப்பக்கமாக வட்டமிட்டாலும் அவையும் நல்ல சகுனங்களே. குழந்தைகள் பிறந்த மேனி கோலத்தில் மெதுவாக எதிரே நடந்து வந்தால் அது மிகவும் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. பக்திமான்கள் இருவராக எதிரே வந்தால் நல்ல சகுனம் ஆகும். எதிரே விதவை பெண் ...